டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் டி20 லீக் தொடரில் ஜோஸ் பட்லர் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது.
வெல்ஷ் ஃபையர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து வரலாறு அவர் படைத்தார். அவர் இதுவரை 522 டி20 போட்டிகளில் விளையாடி 14,833 ரன்கள் குவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, 746 டி20 போட்டிகளில் விளையாடி கிரண் பொல்லார்டு 14,803 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்து வந்தது. கிரண் பொல்லார்டின் இந்த சாதனையை தற்போது முறியடித்து ஜோஸ் பட்லர் வரலாறு படைத்துள்ளார்.
இந்த வரிசையில் கிறிஸ் கெயில் (14,562 ரன்கள்), அலெக்ஸ் ஹேல்ஸ் (14,449 ரன்கள்), டேவிட் வார்னர் (14,284 ரன்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Summary
England's Jos Buttler has made history by scoring the most runs in T20 matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவுடு மண் அனுமதியை பயன்படுத்தி நூதன முறையில் மணல் திருட்டு

கடைசி டி20: ஜோஸ் பட்லர் சதம் விளாசல்; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!

மறுவெளியீடாகும் மாதவன் - மீரா ஜாஸ்மினின் ரன் திரைப்படம்!

டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் புதிய சாதனை!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin




