பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கடைசி டி20: ஜோஸ் பட்லர் சதம் விளாசல்; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.

News image

இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் ஜோஸ் பட்லர் - படம் | AP

Updated On :11 ஜூலை 2026, 10:10 pm IST

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.

ஜோஸ் பட்லர் சதம் விளாசல்; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். பில் சால்ட் 6 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லருடன் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியில் மிரட்டியது. அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் சதம் விளாசி அசத்தினார். அவர் 64 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

மறுமுனையில் அதிரடியில் கலக்கிய கேப்டன் ஹாரி ப்ரூக் 45 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். வில் ஜாக்ஸ் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்தியா தரப்பில் ஷிவம் துபே இரண்டு விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the final T20 match against India, the England team scored 257 runs for the loss of 3 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.