வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

லார்ட்ஸ் டெஸ்ட்: கிராந்தி கௌட் அசத்தல்; தடுமாறும் இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள் - படம் | பிசிசிஐ

Updated On :11 ஜூலை 2026, 6:19 pm IST

இந்தியாவுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 21 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின்போது, 137 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து அணியில் மையா பௌச்சர் 23 ரன்கள், டம்மி பீமௌண்ட் 2 ரன்கள், ஹீதர் நைட் 6 ரன்கள், அலைஸ் கேப்ஸி 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய எமி ஜோன்ஸ் 62 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இந்தியா தரப்பில் கிராந்தி கௌட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சயாலி சத்கரே மற்றும் ஸ்நே ராணா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் 39 ரன்களுடனும், மேடி வில்லியர்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 148 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The England team is struggling and losing wickets in the ongoing Test match against India at Lord's.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.