வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வியத்நாம் படகு விபத்து! பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் யார் யார்? முழு விவரம்...

வியத்நாமில் விபத்துக்குள்ளான படகில் தமிழர்கள் உள்பட பயணித்தவர்கள் விவரம் பற்றி...

News image

வியத்நாம் படகு விபத்து - X

Updated On :11 ஜூலை 2026, 5:21 pm IST

வியத்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழனியைச் சேர்ந்த முருக பிரபு என்பவருடன், திருச்சியைச் சேர்ந்த ஒருவர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.

இன்று பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் குறிப்பிடத் தக்க அளவில் தமிழர்கள் இருந்திருக்கின்றனர்.

இறந்தவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகபிரபு (44) என்று தெரியவந்திருக்கிறது. சிறந்த வணிக செயல்பாட்டுக்காக, லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலாவாக இவர் வியத்நாம் அழைத்துச் செல்லப்பட்டவர்.

இதையடுத்து வியத்நாம் படகில் சென்ற 32 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழர்கள்

இந்தப் பட்டியலில் தமிழ்ப் பெயர்கள் அதிகமாக இருக்கின்றன. விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 -க்கும் அதிகமானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.

படகில் சென்றவர்கள் (பெயர் - தந்தை பெயர்)

1. பாலசுப்ரமணி - பழனிசாமி

2. செல்வம் - பிச்சையா

3. செந்தில் குமார் - ஜெயவேல்

4. சிவகுமார் - முத்துக்குமாரசாமி

5. நிர்மல் குமார் - சேதுராமன்

6. முருக பிரபு - ஆறுமுகம்

7. ரூபன் செல்வ நாதன் - ஜேக்கப் யேசுபாதம்

8. ஸ்ரீதர் - தர்மராஜன்

9. விக்னேஷ்வர் - ராதாகிருஷ்ணன் கோபால்

10. ராமசுப்பு - அண்ணாவி

11. அபுதல்கா - ஜாஹிருதீன்

12. ஸ்ரீதர் - சுந்தர்ராஜன்

13. வம்ஷீதர் - செல்லூர் ராம்ராஜ்

14. செஞ்சடைவேல் - குப்புசாமி

15. நாகலமடுகு - சோஹன்

16. நல்லபேட்டை ஆதிசேஷய்யா - ரவிதேஜா

17. ஷேக் அப்துல்லா - அப்துல் மஜீத்

18. ராஜீவ் - கலைவாணன்

19. பாலாஜி - நடேசன்

20. வினய குமார் - சித்தாபுரம் பாஸ்கரா

21. ரவிசங்கர் - சுகுமாரன்

22. விபுல் - உத்தம் சந்த்

23. சந்தோஷ் குமார் - சாந்திலால்ஜெயின்

24. பாபு - குப்புசாமி

25. அழகுராஜன் - சிவசாமி

26. வசந்த குமார் - ஆனந்தன்

27. ஸ்ரீதர் - முடியம்

28. ஜெய லக்ஷ்மி - கெல்லி

29. கிஷோர் - கெல்லி

30. அவிகோட் செரியன் தாமஸ் - தாமஸ்

31. லோவெனி - தாமஸ்

32. ரமேஷ் குமார் - பேச்சியப்பன்

இவர்களில் பலரும் தனியார் மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

திருச்சியைச் சேர்ந்த இருவர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, இரு நாள்களுக்கு முன்பாக தனது நண்பருடன் வியத்நாம் சென்றுள்ளார்.

உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதுபற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாக வியத்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேபோல இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும் அவர்களது உறவினர்களைத் தொடர்புகொள்ளவும் தூதரக அதிகாரிகள், வியட்நாம் நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.

உதவி எண்கள் அறிவிப்பு

வியத்நாம் படகு விபத்து தொடர்பாக ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஹனோய் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள +84 91 308 9165 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

Summary

Vietnam boat accident: Man from Palani killed, Who are the 32 people travelled?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.