பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

இங்கிலாந்துக்கு 50% அபராதம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் 12 புள்ளிகள் குறைப்பு!

தாமதமாக பந்துவீசிய இங்கிலாந்து அணிக்கு எதிரான நடவடிக்கை பற்றி...

News image

இங்கிலாந்து அணி - AP

Updated On :22 ஜூன் 2026, 1:09 pm IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்துவீசிய இங்கிலாந்து அணி வீரர்களின் போட்டி சம்பளத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான புள்ளிப்பட்டியலில் இருந்து 12 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

ஓவலில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 253 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வீச வேண்டிய ஓவர்களைவிட 12 ஓவர்கள் குறைவாக இங்கிலாந்து அணி வீசியதற்காக, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி, இங்கிலாந்து வீரர்களின் போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி விதிகளின்படி, இங்கிலாந்தின் மொத்தப் புள்ளிகளிலிருந்து 12 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஒப்புக் கொண்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பெற்ற 12 புள்ளிகளை இந்த அபராதத்தின் மூலம் இங்கிலாந்து இழந்துள்ளது.

இங்கிலாந்துக்கு இது முதல்முறை அல்ல. கடந்த 2025-ல் இதே குற்றச்சாட்டுக்காக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

1. ஆஸ்திரேலியா

2. தென் ஆப்பிரிக்கா

3. இலங்கை

4. நியூசிலாந்து

5. வங்கதேசம்

6. இந்தியா

7. இங்கிலாந்து

8. பாகிஸ்தான்

9. மேற்கிந்தியத் தீவுகள்

Summary

50% fine for England! 12 Test Championship points deducted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.