குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

டெஸ்ட் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானது: ஜோ ரூட்

டெஸ்ட் போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்துவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

News image

ஜோ ரூட் - படம்: எக்ஸ் / ஜோ ரூட்

Updated On :31 ஜூலை 2026, 6:45 pm IST

டெஸ்ட் போட்டிகளில் அணியைக் கேப்டனாக வழிநடத்துவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரண்டன் மெக்கல்லமும் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங்கும், கேப்டனாக ஜோ ரூட்டும் நேற்று (ஜூலை 30) நியமிக்கப்பட்டனர்.

மீண்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஜோ ரூட் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்துவது கடினம். ஆனால், அதில் சிறப்பாக செயல்படுவது மிகுந்த மதிப்பைக் கொடுக்கும். கடந்த மாதம் மெக்கல்லமுடன் இணைந்து மீண்டும் அணியைக் கேப்டனாக வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த தலைமுறை வீரர்களைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ஸ்டீஃபன் பிளெமிங் வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பல ஆண்டுகளாக பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவருக்கு போட்டி குறித்த அனுபவம் நிறைய உள்ளது. அவருடன் இணைந்து இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட ஆவலாக உள்ளேன் என்றார்.

Summary

England captain Joe Root has stated that leading the team in Test matches is extremely difficult.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.