டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமும், கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் செயல்பட்டு வந்தனர். அண்மையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பிரண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டார். இதனால், புதிய பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இங்கிலாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங்கும், கேப்டனாக ஜோ ரூட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Fleming ð¤ Root
— England Cricket (@englandcricket) July 30, 2026
Click below for full story:
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை ஏற்கனவே கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கொண்ட ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியைக் கேப்டனாக வழிநடத்தியுள்ள பெருமையும் இவரையேச் சேரும்.
இதுவரை இங்கிலாந்து அணியை 65 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ள ஜோ ரூட் 27 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமையும் ஜோ ரூட்டையேச் சேரும்.
கடந்த 2017 - 2022 ஆம் ஆண்டு இடைவெளியில் இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் கேப்டனாக வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Joe Root has been appointed as the captain of the England Test team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமனம்!

இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் ஆகிறாரா அஸ்வின்?

லார்ட்ஸ் டெஸ்ட்: கிராந்தி கௌட் அசத்தல்; தடுமாறும் இங்கிலாந்து!

டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் புதிய சாதனை!
விடியோக்கள்




