உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஓவலில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நடத்தும் உரிமையை கடந்த ஆண்டே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பெற்றது. அதன் படி, அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்தாண்டு ஓவலில் ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக ஓவலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவாகவே நாள்கள் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் 9 அணிகள் உள்ளன. ஆஸ்திரேலிய அணி 87.50 சதவிகித புள்ளிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. 75 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ððð«ð¤ ð²ð¨ð®ð« ððð¥ðð§ððð«ð¬ ðð¨ð« ðð¡ð #ððððð ðð¢ð§ðð¥ ðï¸
— ICC (@ICC) July 23, 2026
ððð ðððððð¼ðð ðððð ðð¼ð ð¼ ð¿ð¼ðð ð¼ðð¿ ð¼ ððð¼ð¾ð ð
More details â¡ï¸ https://t.co/Ee62S7i8uA pic.twitter.com/EVWVlqMLkv
நியூசிலாந்து (72.22%) , வங்கதேசம் (58.33%) , இந்தியா (48.15%), இலங்கை (41.67%), இங்கிலாந்து (24.36%) , மேற்கிந்தியத் தீவுகள் (15%) மற்றும் பாகிஸ்தான் (8.33%) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மூன்று முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிமுக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியும், 2025 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
Summary
The ICC has announced that the World Test Championship final will be held at The Oval.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து பேட்டிங்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி தயாரா?

இங்கிலாந்துக்கு 50% அபராதம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் 12 புள்ளிகள் குறைப்பு!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai




