திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

ஆஷஸ் 2027 தொடர்: அட்டவணை வெளியீடு!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் 2027 தொடருக்கான அட்டவணை குறித்து...

News image

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியினர். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இசிபி

Updated On :23 ஜூலை 2026, 4:30 pm IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் 2027 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.

கடைசியாக நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அந்த வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸி. முன்னேறியது.

டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சுவாரசியம் மிகுந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தனியான் ரசிகர்கள் கிரிக்கெட் உலகில் இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் அடுத்ததாக 2027ல் நடக்கிறது. இதனை இங்கிலாந்து நடத்துகிறது. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் திடலில் நடக்கிறது. அந்தப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை நடைபெற இருக்கிறது.

முதல்போட்டி: டிரெண்ட் பிரிட்ஜ் - ஜூன் 18 முதல் 22

இரண்டாவது போட்டி: லார்ட்ஸ் - ஜூன் 30 முதல் ஜூலை 4

மூன்றாவது டெஸ்ட்: எட்ஜ்பாஸ்டன் - ஜூலை 8 முதல் ஜூலை 12

நான்காவது டெஸ்ட்: சௌதாம்டான் - ஜூலை 21முதல் ஜூலை 25

ஐந்தாவது டெஸ்ட்: தி ஓவல் - ஜூலை 29 முதல் ஆக.2

மகளிருக்கான ஆஷஸ் தொடரும் ஆடவருக்கான போட்டிகள் நடக்கும்போதே நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டி லீட்ஸ் திடலில் ஜூன் 24-27வரை நடைபெற இருக்கிறது.

இதில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளாக நடப்பதும் கவனிக்கத்தக்கது.

Summary

Trent Bridge to kick off the 2027 men''s Ashes as England hosts Australia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.