முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவமாக பதிவிட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தடையை மீறி மாணவர்களும், இளைஞர்களும் பேரணியைத் தொடர முயற்சித்த நிலையில், அவர்கள் மீது கண்மூடித்தனமாக தில்லி காவல்துறை தாக்குதல் நடத்தியது. சிறப்பு அதிரடிப் படைக் காவலர்கள் மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதனைக் கண்டித்து திரைப் பிரபலங்கள் பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியதாவது:
இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாணவருக்கும் பெண்ணுக்கும் மற்றும் ஆணுக்குமானது:
அமைதியான சூழலில் கற்கவும், பாதுகாப்பான முறையில் வளரவும், உங்கள் கனவுகளை நனவாக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் நல்வாழ்வே ஒளிமயமான இந்தியாவின் அடித்தளமாகும்.
அன்பு, வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கை நிறைந்த சமூகங்களை உருவாக்க ஒன்றிணைய வாருங்கள்.
கலந்துரையாடலின் மூலம், இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு இணக்கமான தீர்வை நாம் காண முடியும் எனக் கூறியுள்ளார்.
Summary
Your well-being is the foundation of a brighter India saya Former Indian Player Yuvraj Singh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











