இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.
கேப்டன் அரைசதம் விளாசல்; இந்தியாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து அணியில் கேப்டன் லோர்கான் டக்கர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேரத் டெலானி 49 ரன்கள், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்கள், டிம் டெக்டார் 17 ரன்கள், பெஞ்சமின் 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷிவம் துபே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in the first T20 match against India, the Ireland team scored 182 runs for the loss of 9 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3-வது ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

2-வது ஒருநாள்: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் இலக்கு!

மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

அறிமுகப் போட்டியில் பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 155 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK




