காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ

Updated On :23 ஜூலை 2026, 6:31 pm IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது.

மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக வெஸ்லி மத்வீர் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 27 ரன்களும், ரியான் பர்ல் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஷிவம் துபே மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the first T20 match against India, Zimbabwe scored 125 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.