ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல் ஒருநாள்: நஹித் ராணா அபார பந்துவீச்சு; 141 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

Bangladesh players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் - படம் | AP

Published On :6 ஜூலை 2026, 5:57 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில், தற்போது இரு அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 6) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 36.4 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நியூமேன் நியாம்ஹுரி 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரிச்சர்ட் நிகராவா 27 ரன்களும், இன்னோசண்ட் கையா 26 ரன்களும் எடுத்தனர். பென் கரண் 18 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நஹித் ராணா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது இரண்டு விக்கெட்டுகளையும், கேப்டன் மெஹிதி ஹாசன் மிராஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.

Summary

Batting first in the first ODI against Bangladesh, the Zimbabwe team was bowled out for 141 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.