சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.

News image

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வங்கதேச வீரர் தௌகித் ஹிரிடாய் - படம் | AP

Updated On :14 ஜூன் 2026, 5:41 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று (ஜூன் 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாக் கைப்பற்றுமா?

முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக தௌகித் ஹிரிடாய் 88 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லிட்டன் தாஸ் 58 ரன்களும், மொசாதேக் ஹொசைன் 56 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டே 24 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் மற்றும் மாட் ரென்ஷா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பென் துவார்ஷூயிஸ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் வங்கதேசம் விளையாடி வருகிறது.

Summary

Batting first in the third ODI against Australia, Bangladesh scored 274 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.