பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான் குறித்து...

News image

ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான் வீரர்கள். - படம்: ஏபி

Updated On :5 ஜூன் 2026, 12:45 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என வென்று அசத்தியுள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் வெல்ல, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இந்த நிலையில், நேற்று மாலை தொடங்கிய கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஷ் இங்லீஷ் 65 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் அசத்திய ஷாஹீன்ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளும் அப்ரார் அகமது, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 41.5 ஓவர்களில் 161/6 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 40 ரன்கள் எடுத்தார். மேத்திவ் குன்னஹ்மேன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் ஷாஹீன்ஷா அஃப்ரிடியும் தொடர் நாயகனாக அராஃபத் மின்ஹாஸும் தேர்வானார்கள்.

Summary

Pakistan beats Australia by four wickets to clinch ODI series 2-1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.