ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கானலி தனது முதல் ஒருநாள் சதத்தை நிறைவு செய்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்தச் சதத்தை நிறைவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன. ஏற்கெனவே, 2 ஒருநாள் போட்டிகளில் ஆஸ். டிஎல்எஸ் விதியின்படி தோல்வியுற்றது.
இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 274/5 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிதாய் 83 ரன்கள் குவித்தார்.
மூவர் அரைசதம் அடித்து அசத்தினார்கள். ஆஸி. சார்பில் சேவியர் பார்ட்லெட், மாட் ரென்ஷா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தற்போது, ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களில் 202/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் கூப்பர் கானலி 113* , ஆலிவர் பீக் பூஜ்ய ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் 87 பந்துகளில் கூப்பர் கானலி சதம் அடித்து அசத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் நிதானமாகவும் தேவைப்படும் சமயத்தில் அதிரடியாகவும் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு இந்தத் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியில் 35, இரண்டாவது போட்டியில் டக் அவுட்டாக மூன்றாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஒருநாள் தொடரை ஏற்கெனவே இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றியை கூப்பர் கானலி பெற்றுத்தரவிருக்கிறார். அடுத்த டி20 போட்டிகள் ஜூன் 17, 19, 21ஆம் தேதிகளில் நடைபெற இருக்கின்றன.
Summary
Cooper Connolly maiden ODI hundred for australia heading towards a consolation victory!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்!

ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

தோல்வியிலும் கவனம்பெற்ற பஞ்சாப் வீரர்..! கூப்பர் கானலியின் வரலாற்றுச் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



