ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

சேலம் வன்கொடுகை வழக்கு விவகாரத்தில் வணிக முறையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்துள்ள நிலையில், காவல்துறையினர் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

police

மாதிரிப் படம்

Published On :

சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேலம் மாநகரின் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய செய்தி நெஞ்சத்தை பதற வைக்கிறது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மணிகண்டன் நேற்று முன்தினம் (12.06.2026) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்தும் தீவிரமாக விசாரித்து அதன் விபரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருவது பெரும் வேதனையளிக்கிறது. புதிய ஆட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்புப் படை அமைத்துள்ளது. இதன் பணியை முழுவீச்சில் விரிவு படுத்த வேண்டும்.

சேலம் பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்களில் மணிகண்டன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என விசாரணை எல்லையை சுருக்கி விடாமல், அவருக்கு பின்பலமாக இருந்து செயல்பட்ட நபர்கள் யார், யார் என்பது உட்பட குற்றச் செயலின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியமாகும்.

நீண்ட காலமாக வணிக முறையிலான குற்றச் செயல்கள் நடந்து வந்துள்ள நிலையில், அது காவல்துறையினர் கவனத்துக்கு வராமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.

எனவே, இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Salem Rape Case Could it have happened without the police's knowledge CBCID inquiry must be ordered

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.