இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 13) தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதலில் விளையாடியது.
ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசல்; இந்தியாவுக்கு 195 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணிக்கு தொடக்கம் பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின், செதிக்குல்லா அடல் 0 ரன்களிலும், ரஹ்மத் ஷா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன் பின், ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி ஜோடி சேர்ந்தனர். களமிறங்கியது முதலே அதிரடியில் மிரட்டிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 48 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 30 பந்துகளில் 27 ரன்களும், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 16 பந்துகளில் 26 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் அறிமுக வீரர்களான ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
Summary
Batting first in the first ODI against India, the Afghanistan team was bowled out for 194 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை!

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழையினால் தாமதம்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல எங்களது திட்டம் இதுதான்: ஆப்கன் கேப்டன்








