ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சர்வதேச டி20 போட்டிகளில் அக்‌ஷர் படேல் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் அக்‌ஷர் படேல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

Axar Patel

அக்‌ஷர் படேல் - படம் | பிசிசிஐ

Published On :5 ஜூலை 2026, 10:37 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் அக்‌ஷர் படேல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜூலை 4) மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 190 ரன்கள் எடுக்க, 19 ஓவர்களில் இலக்கை எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.

நேற்றையப் போட்டியில் அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதுவரை இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்‌ஷர் படேல், 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Summary

Indian player Axar Patel has set a new record in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.