ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Vaibhav Suryavanshi

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Published On :5 ஜூலை 2026, 7:58 pm IST

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துளியும் பயமின்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் அறிமுக வீரராக களமிறங்கினார். இருப்பினும், அறிமுகப் போட்டியில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை எனவும், அவர் ஆண்டு முழுவதும் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெள்ளைப் பந்து போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர் தொடர்ச்சியாக அணியில் சேர்க்கப்பட்டு விளையாட வைக்கப்பட வேண்டும். சரியாக விளையாடவில்லை எனக் கூறி அவருக்கு ஓய்வளிக்க வேண்டாம். அவருக்கு இப்போது ஓய்வே தேவையில்லை. அவரால் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதும்கூட விளையாட முடியும். ஒரு பேட்டராக அவருக்கு பந்துவீச்சாளர் அளவுக்கு உடற்தகுதி தேவையில்லை.

தொடர்ச்சியாக விளையாடும்போது அவரால் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அவரை விளையாட வைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்க வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் ஒரு மிகப் பெரிய முதலீடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சிவராமகிருஷ்ணன் டெஸ்ட் போட்டிகளில் 17 வயதில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

Summary

A former Indian player has stated that young player Vaibhav Suryavanshi does not need any rest at all.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.