FOLLOW US

ON GOOGLE DISCOVER

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

2-வது ஒருநாள்: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :7 ஆகஸ்ட் 2026, 9:47 pm IST

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியது. ஆட்டம் மழை காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 300 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் அதிகபட்சமாக 97 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, செதிக்குல்லா அடல் 45 ரன்கள், ஹஸ்மதுல்லா ஷகிதி 36 ரன்கள், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 33 ரன்கள், ரஹ்மனுல்லா குர்பாஸ் 32 ரன்கள், கேப்டன் ரஹ்மத் ஷா 30 ரன்கள் எடுத்தனர்.

அயர்லாந்து தரப்பில் மார்க் அடார் மற்றும் ஜெய் மூந்த்ரா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கேவின் ஹோ, கர்டிஸ் கேம்ஃபர் மற்றும் ஹாரி டெக்டார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the second ODI against Ireland, the Afghanistan team scored 299 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.