பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் மகளிரணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 28) நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 49 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, குல் ஃபெரோஷா 40 ரன்கள், முனீபா அலி 34 ரன்கள் மற்றும் நஜிஹா அல்வி 30 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இலங்கை தரப்பில் சேத்தனா விமுக்தி, கேப்டன் சமாரி அத்தப்பத்து மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 3 விக்கெட்டுகளையும், இனோகா ரணவீரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரை வென்ற இலங்கை அணி!
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 37.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹர்ஷிதா சமரவிக்கிரம 92 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் சமாரி அத்தப்பத்து அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஹாசினி பெரேரா 77 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஃபாத்திமா சனா மற்றும் உம்-இ-ஹனி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டன் சமாரி அத்தப்பத்து ஆட்ட நாயகியாகவும், ஹர்ஷிதா சமரவிக்கிரம தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Summary
Sri Lanka achieved a magnificent victory by eight wickets in the third ODI against Pakistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டத்தின் பாதியில் பெவிலியன் திரும்பிய ஷுப்மன் கில்; காரணம் என்ன?

கீஸி கார்ட்டி, சாய் ஹோப் அதிரடி: ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய மே.இ.தீவுகள்!

வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய ஜிம்பாப்வே!

முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2




