பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

அஜிங்க்யா ரஹானேதான் எனக்குப் பிடித்த பேட்டிங் பார்ட்னர்: விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஜிங்க்யா ரஹானேதான் தனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

News image

விராட் கோலி - அஜிங்க்யா ரஹானே - படம் | விராட் கோலி (எக்ஸ்)

Updated On :30 ஜூலை 2026, 8:09 pm IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஜிங்க்யா ரஹானேதான் தனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (ஜூலை 30) அறிவித்தார். இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விளையாடிய நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் விடைபெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஜிங்க்யா ரஹானே ஓய்வு பெற்றது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: உங்களது சிறப்பான கிரிக்கெட் பயணத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளீர்கள். உங்களது கிரிக்கெட் பயணத்தை நினைத்து நீங்கள் மிகவும் பெருமையடையலாம். சிலிப்பில் உங்களைப் போன்று கேட்ச் செய்வது மிகவும் கடினம். உங்கள் கைகளில் பந்து பாதுகாப்பாக தஞ்சமடையும். நீங்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர். உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய கடவுள் அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஜிங்க்யா ரஹானே 5077 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள், 26 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 38.46 ஆக உள்ளது. இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் 2962 ரன்களும் மற்றும் 20 டி20 போட்டிகளில் 375 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.

6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தியுள்ள அஜிங்க்யா ரஹானே, அதில் தோல்வியே சந்திக்காதது குறிப்பிடத்தக்கது.

Summary

Virat Kohli has stated that Ajinkya Rahane is his favorite batting partner in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.