இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் விளாசினர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கார்டிஃபில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஷுப்மன் கில் 31 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அதைத்தொடர்ந்து வந்த இஷான் கிஷான் ஒரு ரன்னில் வெளியேறினார். நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் விளாசி அசத்தினார். 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. அவரைப் போலவே, ஷ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார்.
அவருக்குப் பின்னால் வந்த வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களும், அக்ஷர் படேல் ஒரு ரன்னும், குர்னூர் பிரார் 7 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 13 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், சஹிப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளும், சாம் கரன், வில் ஜாக்ஸ் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Summary
Jofra Archer began the collapse with the wickets of Axar Patel and Shivam Dube, which has resulted in India getting bowled out for 233 runs. India are well below par in what looked like a good batting track at Cardiff.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லார்ட்ஸ் டெஸ்ட்: கிராந்தி கௌட் அசத்தல்; தடுமாறும் இங்கிலாந்து!

2-வது டி20: அபிஷேக் சர்மா அசத்தல்; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!

இங்கிலாந்து ஒருநாள் தொடா்: இந்திய அணியில் விராட் கோலி!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


