வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ரூ.96 கோடி தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏற்றுமதி!

வா்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள் பற்றி..

News image

தங்க, வைர நகைகள் - File photo

Updated On :16 ஜூலை 2026, 3:55 pm IST

இந்தியா - பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், நாட்டில் மும்பை, சூரத், ஜெய்ப்பூர், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து பிரிட்டனுக்கு தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதியின் முதல் நாளில், நாட்டில் மேற்கண்ட ஆறு நகரங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இந்திய ஏற்றுமதியாளர்கள் மூலம் ரூ.96 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைர நகைகள் ஏற்றுமதி, கொடியசைத்துத் தொடக்கி வைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டில் சூரத், மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், திரிசூர் நகரங்களைச் சேர்ந்த தங்க நகை, வைர நகை, ரத்தினக் கற்கள் தயாரிப்பாளர்கள், பிளாடினம் நகைகள், வெள்ளி நகைகள், முத்து மற்றும் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைர நகைகள் உள்ளிட்ட முக்கிய நகைத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல்வேறு ஆர்டர்களை தொடர்ந்து பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

இரு நாடுகள் இடையே விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை நடைமுறைக்கு வந்த முதல் நாளில் ஜவுளி, நகைகள் என ரூ.1348 கோடி மதிப்பிலான (140 மில்லியன் டாலர்) பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே 140 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 50 சரக்குத் தொகுப்புகள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில், இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பல்வேறு துறைகள் பிரிட்டன் சந்தையில் வலுவான தொடர்பைப் பெறும். மேலும், தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை பெருக்குவதுடன், திறமையான இந்தியர்களின் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கவும் இது துணைபுரியும் என்று பதிவிட்டிருந்தார்.

பிரிட்டனுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஜவுளி, ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் ரத்தினம்-ஆபரணங்கள் போன்ற அதிக மனிதவளத் தேவை கொண்ட பல துறைகள், பிரிட்டன் சந்தையில் சுங்கவரி இல்லாத அணுகலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஜவுளி, ரத்தினம்-ஆபரணங்கள் மற்றும் கடல்சார் பொருள்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே சுங்கவரி இல்லாத அடிப்படையில் சரக்குகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவில் உள்ள 30 ஏற்றுமதியாளர்கள் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆபரணங்களை இங்கிலாந்துக்கு அனுப்பியதாக ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி 2.5 பில்லியன் டாலரை எட்டும் என்று இத்துறை சார்ந்த அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.

இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதத்திற்கும் (வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100 சதவீதம்) சுங்கவரி இல்லாத சந்தைத் தொடர்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கரூரிலிருந்து..

கரூரில் இருந்து ஜவுளி வர்த்தக சங்கம் சார்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஜவுளி துணிகள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Summary

Trade Agreement Gold, silver diamond jewelry exported to Britain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.