புதுதில்லி: உலகச் சந்தைகளில் நிலவும் பலவீனம் மற்றும் அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,850 குறைந்து ரூ.1.59 லட்சமாக வர்த்தகமானது.
அகில இந்திய சரஃபா சங்கத்தின் தகவலின் அடிப்படையில், 99.9 சதவீதத் தூய்மை கொண்ட தங்கம், நேற்றைய வர்த்தக முடிவில் 10 கிராமுக்கு ரூ.1,61,450 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,850 ஆக சுமார் 1.14 சதவீதம் சரிந்து 10 கிராமுக்கு ரூ.1,59,600 ஆக குறைந்தது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,500 சரிந்து ரூ.2,69,500 ஆக வீழ்ச்சியடைந்தது. இதுவே முந்தைய வர்த்தக அமர்வில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,71,000 ஆக இருந்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதே உள்நாட்டுச் சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்குக் காரணமாகும்.
சர்வதேசச் சந்தையில், ஸ்பாட் தங்கம் 0.54 சதவீதம் சரிந்து அவுன்ஸுக்கு 4,463.84 அமெரிக்க டாலராகவும், வெள்ளி 1 சதவீதம் சரிந்து அவுன்ஸுக்கு 74.43 அமெரிக்க டாலராகவும் குறைந்தது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான ஒப்பந்தம் எட்டப்படாமல் இழுபறியாகவே நீடிப்பதால், தங்கம் விலை அழுத்தத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
Summary
Gold prices declined by Rs 1,850 to Rs 1.59 lakh per 10 grams in the on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










