மும்பை: தொழிலாளர் விதிமீறல்களைக் காரணம் காட்டி, இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 95.67ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கான வலுவான தேவை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அரசியல் பதற்றங்கள் மற்றும் அயல்நாட்டு நிதி தொடர் வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குலைத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.43ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில் ரூ. 95.80 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. இறுதியாக, நேற்றைய நாள் நிறைவு விலையிலிருந்து 31 காசுகள் சரிந்து ரூ. 95.67ஆக வர்த்தக அமர்வை நிறைவு செய்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ. 95.36ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
Summary
The rupee depreciated 31 paise to close at 95.67 against the US dollar on Wednesday.
23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவு; ஐடி துறை பங்குகள் தொடர் பின்னடைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








