போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

முதல் டெஸ்ட்: ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Australian players rejoicing after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் - படம் | AP

Published On :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதனையடுத்து, 106 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 314 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய தென்னாப்பிரிக்காவுக்கு 421 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!

421 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் அய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேவிட் பெடிங்ஹம் 46 ரன்கள், மார்கோ யான்சென் 35 ரன்கள் மற்றும் வியான் முல்டர் 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மாட் ரென்ஷா இரண்டு விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய மாட் ரென்ஷாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

The Australian team achieved a magnificent victory by 214 runs in the first Test match against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.