தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி! கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!வங்கக் கடலில் நாளை வலுவடைகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்புஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடைதொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 27 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணியில் அதிகபட்சமாக நயீம் ஹாசன் 91 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஜேக்கர் அலி 22 ரன்களும், ஷாத்மன் இஸ்லாம் 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 35.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 115 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜான் கேம்பெல் 49 ரன்களும், காவெம் ஹாட்ஜ் 31 ரன்களும் எடுத்தனர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஜோமல் வாரிக்கனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

The West Indies team secured a resounding 8-wicket victory in the first Test match against Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.