கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!வங்கக் கடலில் நாளை வலுவடைகிறது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!திருவாரூர் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் பலி: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்புஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடைதொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?

தொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து...

Australian batsman Marnus Labuschagne walks off after being bowled on the third day of the first cricket Test match between Australia and Bangladesh at Marrara Stadium in Darwin on August 15, 2026. (Photo by William WEST / AFP)

மார்னஸ் லபுஷேன் (கோப்புப் படம்) - AFP

Updated On :

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் (32 வயது) டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறதென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கேப் டவினில் தொடங்கிய கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா 387 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 288 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், ஆஸி. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. லபுஷேன் எல்பிடபிள்யூ மூலம் ரபாடா ஓவரில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் (37+37) 74 ரன்களும், இரண்டாவது போட்டியில் (14+39) 53 ரன்களும் எடுத்தார். தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் (0+4) 4 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த லபுஷேன் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தமாக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,857 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 43.37ஆக இருக்கிறது.

தொடக்க காலங்களில் அசத்திய மார்னஸ் லபுஷேன் கடையாக சில ஆண்டுகளில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். 2025 முன்பாக லபுஷேன் 96 இன்னிங்ஸ்களில் 4,337 ரன்கள் குவித்திருந்தார்.

அதாவது 2025 வரை சராசரி 48.2ஆக இருந்தது. 2025க்குப் பிறகு 26 இன்னிங்ஸ்களில் 520 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 21.7ஆக குறைந்தது.

இந்தத் தொடருடன் அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் வாழ்க்கை முடிவுக்கு வருமென பலரும் கூறி வருகிறார்கள். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து, இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.

Summary

A string of blunders... Is Marnus Labuschagne’s Test cricket career coming to an end?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.