
பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய மார்னஸ் லபுஷேன்; முதல் டெஸ்ட்டில் அசத்துவாரா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் சதம் விளாசி அசத்தினார்.

மார்னஸ் லபுஷேன் (கோப்புப் படம்)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் சதம் விளாசி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பிரதான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியா லெவன் மற்றும் தென்னாப்பிரிக்கா இன்விடேஷனல் லெவன் அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. இந்த ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் சதம் விளாசியது ஆஸ்திரேலிய அணிக்கு நேர்மறையான விஷயமாக பார்க்கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய மார்னஸ் லபுஷேன் 89 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். அதில் 19 பவுண்டரிகள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் தன்னுடைய இடத்தை உறுதியாக்கிக்கொள்ள மார்னஸ் லபுஷேனுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசாத லபுஷேன், பயிற்சியாட்டத்தில் அபாரமாக விளையாடி சதம் விளாசியது அவரது நம்பிக்கையை அதிகரித்திருக்கும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பிரதான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்த இடத்தை உறுதி செய்வாரா லபுஷேன் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Summary
Australian player Marnus Labuschagne impressed by smashing a century in the warm-up match against South Africa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







