முதல் டெஸ்ட்: மாட் ரென்ஷா அசத்தல் சதம்; 390 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சதம் விளாசிய மகிழ்ச்சியில் மாட் ரென்ஷா - படம் | AP
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று (அக்டோபர் 9) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
மாட் ரென்ஷா சதம் விளாசி அசத்தல்!
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 390 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான நிக் மேடின்சன் 0 ரன் மற்றும் டிராவிஸ் ஹெட் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மாட் ரென்ஷா சதம் விளாசி அசத்தினார். மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 397 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் பாட் கம்மின்ஸ் 43 ரன்கள், மார்னஸ் லபுஷேன் 37 ரன்கள், நாதன் லயன் 27 ரன்கள் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆன்ரிச் நோர்கியா இரண்டு விக்கெட்டுகள் மற்றும் சிமோன் ஹார்மர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் ரிக்கல்டான் 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அய்டன் மார்க்ரம் 15 ரன்களுடனும், டேவிட் பெடிங்ஹம் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 363 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Australia were bowled out for 390 runs in the first innings of the first Test match against South Africa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


