2-வது இன்னிங்ஸிலும் மாட் ரென்ஷா அசத்தல்; தென்னாப்பிரிக்காவுக்கு 421 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற தென்னாப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாட் ரென்ஷா - படம் | AP
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற தென்னாப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
106 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய மாட் ரென்ஷா, இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். அவர் 99 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிக் மேடின்சன் 48 ரன்கள், பியூ வெப்ஸ்டர் 39* ரன்கள், மார்னஸ் லபுஷேன் 37 ரன்கள், பாட் கம்மின்ஸ் 32* ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஆன்ரிச் நோர்கியா மற்றும் கேசவ் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் மற்றும் சிமோன் ஹார்மர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
421 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Summary
A target of 421 runs has been set for the South African team to win the first Test against Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


