எனது பேட்டிங்குக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளிடம் திட்டங்கள் உள்ளன: அபிஷேக் சர்மா
தன்னுடைய பேட்டிங்குக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் திட்டங்கள் இருந்ததாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ
தன்னுடைய பேட்டிங்குக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் திட்டங்கள் இருந்ததாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்தூரில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்த நிலையில், தன்னுடைய பேட்டிங்குக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் திட்டங்கள் இருந்ததாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய பேட்டிங்குக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் திட்டங்கள் இருந்தன. ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸ் எனக்கு எதிராக பந்துவீசியது அவர்களது திட்டங்களில் ஒன்று. ராஸ்டன் சேஸுக்கும் எனக்கும் கடும் போட்டி நிலவியது. அவரது முதல் ஓவரை கவனமாக விளையாடினேன். ஏனெனில், இந்தத் தொடரில் அவர் மிகவும் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.
எனக்கு எதிராகவும் அவரிடம் திட்டங்கள் இருந்திருக்கும். எனக்கு எதிராக அவர்களிடம் திட்டங்கள் இருந்ததால் பவர்பிளேவில் நான் குறைந்த ரன்களே எடுத்தேன். ஆனால், எதிரணியின் திட்டங்களுக்கு எதிராக நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.
Summary
Indian opener Abhishek Sharma has stated that the West Indies team had plans against his batting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


