எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

அதிரடி சதத்தைத் தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய அபிஷேக் சர்மா குறித்து...

Abhishek Sharma, overjoyed after scoring a century

சதம் அடித்த மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா - படம்: பிசிசிஐ

Updated On :

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மற்றுமொரு இந்திய வீரர் இஷான் கிஷன் மூன்றாமிடத்துக்கு கீழறங்கியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் தொடரையும் 3-0 என வென்றது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் அடித்து சாதனை படைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்த அபாரமான ஆட்டத்தினால் அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீரர் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டாப் 10ல் மொத்தமாக நான்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 இடங்கள் கீழிறங்கியுள்ளார்.

ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசை

1. அபிஷேக் சர்மா

2. ஃபர்ஹான்

3. இஷான் கிஷன்

4. ஹாரி புரூக்

5. ஜாஸ் பட்லர்

Summary

Abhishek Sharma topples Ishan Kishan to become world No.1 batter in T20I rankings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.