திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள்: டேரில் மிட்செல்

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள் என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

Abhishek Sharma

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Updated On :

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள் என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை பாராட்டியதுடன், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என நம்புவதாக டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது என நினைக்கிறேன். அவரது சில ஷாட்டுகள் உலகத் தரத்தில் இருந்தன. அதன் காரணமாகவே அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இன்றையப் போட்டியில் அவர் மிக நன்றாக விளையாடினார். அவரது இந்த இன்னிங்ஸை யாரும் மறக்க மாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இந்தியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரை இழந்துவிட்டோம். ஆனால், எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் மிகவும் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டிக்கான சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

Summary

New Zealand all-rounder Daryl has stated that no one will forget Abhishek Sharma's world-class performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.