யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிது கிடையாது: அபிஷேக் சர்மா
யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிது கிடையாது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சர்மா
யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிது கிடையாது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி வெறும் 13.2 ஓவர்களில் எட்டி அபார வெற்றி பெற்றது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக சதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசதம் விளாசிய சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அந்தக் காலத்தில் யுவராஜ் சிங் என்ன மாதிரியான கிரிக்கெட் விளையாடினார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், 12 பந்துகளில் அரைசதம் விளாசுவது அவ்வளவு எளிது கிடையாது. எந்த ஒரு பேட்டரும் யுவராஜ் சிங்கின் சாதனையை அவ்வளவு எளிதில் முறியடித்துவிட முடியாது. இதுபோன்ற சாதனைகள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே படைக்கப்படும்.
ஒரு பேட்டராக நாங்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. அணியின் வெற்றிக்காக அனைத்து வீரர்களும் விளையாடுகிறோம். நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் எளிதாக உள்ளது எனக் கூற மாட்டேன். இந்த வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. இந்த தருணத்தில் அணியின் பயிற்சியாளர்களுக்கு நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அபிஷேக் சர்மாவின் ஆலோசகரான யுவராஜ் சிங், இன்னும் உங்களால் 12 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியவில்லையா என சமூக வலைத்தளப் பதிவில் நகைச்சுவையாக கேட்ட நிலையில், அதற்கு அபிஷேக் சர்மா இவ்வாறு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian opening batter Abhishek Sharma has stated that breaking Yuvraj Singh's record is not an easy task.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

