தில்லி கேபிடல்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம்!
தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

யுவராஜ் சிங் (கோப்புப்படம்)
தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்காக தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் பல்வேறு நிர்வாக முடிவுகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
44 வயதாகும் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒருநாள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக பல உலகக் கோப்பைகளையும் அவர் வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் அவருக்கு அதிகமாக உள்ளது. இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் இளம் வீரர்களான ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கி அவர்களது ஆட்டத்தை மேம்படுத்தவும் உதவியுள்ளார்.
ஒரு வீரராகவும் ஆலோகராகவும் மிகுந்த அனுபவம் கொண்ட யுவராஜ் சிங் முதல் முறையாக பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
He's done it all, won it all ð¥
— Delhi Capitals (@DelhiCapitals) October 13, 2026
Yuvi Paa is coming to Dilli ðâ¤ï¸ pic.twitter.com/VVhjYwgEOs
தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது: தில்லி கேபில்டஸுடன் புதிய அத்தியாயத்தை தொடங்க மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன். அந்த அணியுடனும், அதன் உரிமையாளர்களுடனும் எனக்கு பழக்கம் இருப்பதால் இந்த வாய்ப்பை மிகவும் சிறப்பானதாகப் பார்க்கிறேன். சௌரவ் கங்குலியுடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவருடன் இணைந்து பயிற்சியாளராக செயல்பட ஆர்வமாக உள்ளேன். தில்லி கேபிடல்ஸின் வெற்றிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்க காத்திருக்கிறேன் என்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் விளையாடியுள்ளார். அப்போது, அவரை தில்லி அணி ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததும், அப்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக யுவராஜ் சிங் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
Former Indian player Yuvraj Singh has been appointed as the assistant and batting coach of the Delhi Capitals team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


