மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய செய்துள்ளீர்கள்; ஹர்மன்பிரீத் கௌரை பாராட்டிய யுவராஜ் சிங்!

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹர்மன்பிரீத் கௌர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

Harmanpreet Kaur

ஹர்மன்பிரீத் கௌர் - படம் | ஐசிசி

Published On :

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹர்மன்பிரீத் கௌர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஹர்மன்பிரீத் கௌர் இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளார். கேப்டனாக தனது கடைமை முடிந்துவிட்டதாக தெரிவித்த அவர், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், கேப்டனாக இந்திய அணிக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளீர்கள் என ஹர்மன்பிரீத் கௌரை முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக யுவராஜ் சிங் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளீர்கள். பொறுப்பு, அழுத்தம், ஏற்ற, இறக்கங்கள் என அனைத்து சூழல்களிலும் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளீர்கள். இந்திய அணிக்காகவும், நாட்டுக்காகவும் கேப்டனாக நீங்கள் செய்துள்ள சாதனைகள் அனைத்துக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian player Yuvraj Singh has spoken about Harmanpreet Kaur, who has announced her decision to step down as the captain of the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.