டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டது பற்றி...

ganguly

சௌரவ் கங்குலி (கோப்புப்படம்) - படம் | ஐபிஎல்

Published On :

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தவறவிட்து. இந்த நிலையில், முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில் அணியில் பல்வேறு மாற்றங்களை நிர்வாகம் செய்து வருகிறது.

அந்த வகையில், கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானிக்கு பதிலாக செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, 2019-ல் டெல்லி அணியின் ஆலோசகராகவும், நிர்வாகத்தின் கிரிக்கெட் இயக்குநராகவும் கங்குலி பொறுப்பு வகித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கங்குலி செயல்பட்டுள்ளார்.

இதுகுறித்து கங்குலி தெரிவித்திருப்பதாவது:

“ஐபிஎல் தொடரில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணி, எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான அணி. பல ஆண்டுகளாக இந்த அணியுடன் எனக்கு ஒரு வலுவான உறவு இருக்கிறது.

வருகின்ற சீசனில் டெல்லி அணியுடன் இணைந்து பணியாற்றி, ஒரு வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம், ஐபிஎல் அணிகளுக்கு இடையே நடந்த டிரேடிங்கில், லக்னெள அணியிலிருந்து மீண்டும் டெல்லி அணிக்கு ரிஷப் பந்த் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Summary

Ganguly appointed as Delhi Capitals head coach!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.