ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

நான் வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவேன்: ஹர்மன்பிரீத் கௌர்

வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

Harmanpreet Kaur

ஹர்மன்பிரீத் கௌர் - படம் | பிசிசிஐ

Updated On :

வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வென்ற நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வதோதராவில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஹர்மன்பிரீத் கௌருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் அவர் 121 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், தான் சிறப்பாக விளையாடுவதற்கு நிறைய பயிற்சி தேவைப்படுவதாகவும், வீட்டில் ஒருநாளில் மூன்று முறை பேட்டிங் பயிற்சி மேற்கொள்வதாகவும் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வீட்டில் நான் அதிகம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவேன். நீங்கள் அதிக நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டால், உங்களால் அதிக நம்பிக்கையுடன் இருக்க முடியும். காலை, மதியம் மற்றும் மாலை என ஒருநாளைக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவேன். எனக்கு நிறைய பேட்டிங் பயிற்சி தேவைப்படுகிறது. என்னுடைய வயதை கருத்தில்கொண்டு, நான் நிறைய உடல்தகுதியில் கவனம் செலுத்துகிறேன். மேலும், பேட்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுவதால் அதிகம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடைய வீட்டில் மேற்கொண்ட பயிற்சி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றார்.

Summary

Former Indian team captain Harmanpreet Kaur has stated that she engages in batting practice three times a day at home.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.