தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

இந்திய கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்மன்ப்ரீத் கௌர்!

இந்திய மகளிரணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்ப்ரீத் கௌர் விலகுவதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

ஹர்மன்ப்ரீத் கௌர்.

Published On :

இந்திய மகளிரணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்ப்ரீத் கௌர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜப்பானின் அய்ச்சி - நகோயா மாகாணத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

இந்த நிலையில் இந்திய மகளிரணிக்கு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஹர்மன்ப்ரீத் கௌர் தன்னுடைய கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் ஹர்மன்ப்ரீத் கௌர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இன்று கேப்டன் பதவியிலிருந்து உணர்ச்சிகள் நிறைந்த மனதுடன் விடைபெறுகிறேன். நான் என் கடமையைச் செய்துவிட்டதாக உணர்கிறேன். இந்திய மகளிரணிக்கு கேப்டனாக இருந்ததற்கு என்றென்றும் நன்றியுடையவளாக இருப்பேன். இப்போது நான் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

​​கிரிக்கெட் மீதான காதலுக்காக மீண்டும் விளையாட நான் தயாராகிவிட்டேன். கேப்டன் பதவி முடிவடைகிறது. கிரிக்கெட் பயணம் தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கேப்டனாக ஹர்மன்ப்ரீத்தின் சாதனைகள்

37 வயதான ஹர்மன்ப்ரீத் கௌர், இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009-ல் அவர் அறிமுகமானார். 2016 முதல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தி வந்தார். 2016 ஆம் ஆண்டு முதல்முறையாக இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து 2022-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவி கிடைத்தது. அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டில் மிதாலி ராஜ் ஓய்வுக்கு பிறகு, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் மூன்று மூன்று விதமான கிரிக்கெட்டிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது. சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 211 போட்டிகளில் இந்திய அணியை தலைமை வகித்தார்.

மகளிர் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்ப்ரீத் கௌர் பெற்றுள்ளார். அவர் 155 போட்டிகளில் தலைமை வகித்து 92 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 51 போட்டிகளில் 30-ல் வெற்றி பெற்றுள்ளார். கௌரின் தலைமையில் இந்திய மகளிரணி, மூன்று ஆசியக் கோப்பைகளையும், ஒரு ஒருநாள் உலகக் கோப்பையையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

Summary

Indian women's cricket team's long-serving captain Harmanpreet Kaur on Tuesday stepped down from her position in all three formats, saying that she has done her duty as leader and is now "ready to play for the love of the game again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.