அபிஜீத் தீப்கே, நேஹா போராவுக்கு தடுப்புக்காவல்!தேசியக் கொடி பேரணி செல்ல முயன்ற அபிஜித் தீப்கே கைது!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிறைவு!இந்தியப் பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வு!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

இளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் வழிகாட்டியாக இருப்பார்: ஸ்மிருதி மந்தனா

இளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Harmanpreet Kaur - Smriti Mandhana

ஹர்மன்பிரீத் கௌர் - ஸ்மிருதி மந்தனா

Updated On :

இளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்பிரீத் கௌர் அண்மையில் அவரது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார். ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில், இளம் வீராங்கனைகளுக்கு ஹர்மன்பிரீத் கௌர் சிறந்த வழிகாட்டியாக இருப்பார் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹர்மன்பிரீத் கௌர் இந்திய அணியை நீண்ட காலமாக கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரது அனுபவம் அணியில் உள்ள இளம் வீராங்கனைகள் பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இளம் வீராங்கனைகள் பலரும் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள உள்ளார்கள் என்றார்.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி இன்று (அக்டோபர் 16) நடைபெறுகிறது. கேப்டனாக ஸ்மிருதி மந்தனா இந்திய அணியை வழிநடத்தவுள்ள முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team captain Smriti Mandhana has stated that Harmanpreet Kaur will be an excellent mentor for young female players.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER