கேகேஆர் அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படலாம்: முன்னாள் இந்திய வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ரிங்கு சிங் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஜிங்க்யா ரஹானே அண்மையில் ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில், அந்த அணிக்கு புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு நிறைய தெரிவுகள் இல்லை. அதனால், ரிங்கு சிங் கேப்டன் பொறுப்புக்கு மிகவும் சிறந்த தெரிவாக இருப்பார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் மினி ஏலத்தில் தங்களுக்கான கேப்டனைத் தேடவும் வாய்ப்பிருக்கிறது. கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் கேப்டனைத் தேடினால், என்னுடைய மனதுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப்பின் பெயர் மட்டுமே நினைவுக்கு வருகிறது. அவர் அண்மையில் இந்தியாவில் மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படவே அதிக வாய்ப்பிருப்பதாக உணர்கிறேன் என்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
A former Indian player has suggested that Rinku Singh could be appointed as the new captain of the Kolkata Knight Riders team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


