மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கடந்த மூன்று சீசன்களிலும் மும்பை அணியை ஹார்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தினார்.
இருப்பினும், ஹார்திக் பாண்டியா டிரேடிங் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அண்மையில் இணைந்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மூன்று சீசன்களுக்குப் பிறகு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
âWe bid for Rohit in 2011, and from that moment, he became part of our Mumbai Indians family.
— Mumbai Indians (@mipaltan) November 27, 2026
I still remember the young Rohit who joined us, and it has been such a joy and privilege to watch him grow over the years as a cricketer, a champion, a leader, and a wonderful family⦠pic.twitter.com/qaMprHNM7f
Smile, everybody smile ð#MumbaiIndians #CaptainRo pic.twitter.com/YUqYZTQxu9
— Mumbai Indians (@mipaltan) November 27, 2026
இது தொடர்பாக மும்பை அணி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரோஹித் சர்மா தெரிவித்ததாவது: ஐபிஎல் தொடரின் 20-வது சீசனுக்கு நான் தயாராக உள்ளேன். மும்பை அணியின் கேப்டனாக அடுத்த சீசனில் அணியின் கேப்டனாக அணிக்கு நிறைய மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க காத்திருக்கிறேன் என்றார்.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Rohit Sharma has been re-appointed as the captain of the Mumbai Indians team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


