திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

மதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்

மதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தர்வு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் - file photo

Updated On :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன் என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல்நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பதாக உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் பிற மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராகவும், விவகாரம் குறித்து பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், மலையில் உள்ள தூணில் விளக்கேற்றாத விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் மீது பழிசுமத்த ஆட்சியர் முயற்சிப்பதாகவே தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், உத்தரவை செயல்படுத்தாததில் மனவருத்தம் ஏற்படுகிறது.

நவ. 20 உத்தரவை செயல்படுத்தாத விவகாரத்தில், மதுரை மாவட்ட நிர்வாகத்தில் குழப்பங்கள் இருக்கின்றன. உத்தரவை செயல்படுத்துவதில் மெத்தனப்போக்கு இருந்துள்ளது மனவேதனை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாது அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும். நீதிமன்ற உத்தரவை மெத்தனமாக கையாளும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எந்தவொரு அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது. நீதிமன்றத்தின் உத்தரவை அதுவே மாற்றும்வரை அதை மீற முடியாது என்றும் அடுக்கடுக்கான கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நவ. 20 இடைக்கால உத்தரவு என்ன?

உச்சநீதிமன்றம் நவம்பா் 20 அன்று, நவம்பா் 24 ஆம் தேதி கார்த்திகைத் தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் இந்த ஆண்டு மட்டும் தற்காலிகமாக கோவில் தேவஸ்தானம் நியமிக்கும் குழுவைக் கொண்டு, மதுரை மாவட்ட ஆட்சியா் கண்காணிப்பின் கீழ், உரிய பாதுகாப்புடன், மக்கள் யாருமின்றி ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமல் அந்நாளில் தீபம் வழக்கமான இடத்திலேயே ஏற்றப்பட்டதால், நீதிமன்ற உத்தரவு நிறைவேறவில்லை என்றுகூறி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது.

Supreme Court rejects Madurai Collector’s preliminary report in Tirupparankundram case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.