சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் தூணில் நாளை தீபம்! உத்தரவை செயல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு!இருப்பில் உணவு, நீர், கையில் பணம்! கோவிட் காலத்தைவிட மோசமாக 2027! ஏஐ ஆராய்ச்சியாளர் எச்சரிக்கைதிருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

சென்செக்ஸ் 989 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,610 க்கு கீழ் வர்த்தகம்!!

சென்செக்ஸ் 989.33 புள்ளிகள் சரிந்து 83,339.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 277.30 புள்ளிகள் சரிந்து 25,607.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Updated On :

மும்பை: ஐடி மற்றும் எச்டிஎஃப்சி பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபப் பதிவு மேற்கொண்டதாலும், கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்ததாலும், இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 989 புள்ளிகளும், நிஃப்டி 25,610 க்கு கீழே நிறைவடைந்தது. இதன் மூலம், முக்கியப் பங்கு குறியீடுகளின் இரண்டு நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,120.26 புள்ளிகள் சரிந்து 83,208.33 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 989.33 புள்ளிகள் சரிந்து 83,339.26 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 277.30 புள்ளிகள் சரிந்து 25,607.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா ஸ்டீல், பவர் கிரிட் மற்றும் டிரெண்ட்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

கடந்த நான்கு வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த இந்தியப் பங்குச் சந்தை, இன்றயை வர்த்தக முடிவில் கடுமையாக சரிந்தன. இதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் உள்ளூர் பத்திர வருவாய் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக அமைந்தன. இதனிடையே ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை பங்குகளும் சரிந்தன.

மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும் கவலை எழுந்துள்ளது. அதே நேரத்தில், ஆசிய நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகள் மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளன. இதனால், உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளில் ஒரு பகுதியை இந்திய சந்தையிலிருந்து ஆசிய செயற்கை நுண்ணறிவு பங்குகளுக்கு மாற்றியமைக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 5,843.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி 4.34 சதவீதமும் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு 3.73 சதவீதம் உயர்ந்தது. ஜப்பானின் நிக்கி 225 2.11% உயர்ந்த நிலையில் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 2.11% உயர்ந்தது.

ஐரோப்பிய சந்தை உயர்ந்து நிறைவடைந்தன. நன்றி தெரிவிக்கும் நாள் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.76 சதவீதம் உயர்ந்து 97.22 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark equity indices snapped their two-day rally on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.