காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!

சென்செக்ஸ் 1,502.29 புள்ளிகள் உயர்ந்து 83,938.28 புள்ளிகளாகவும், நிஃப்டி 469.60 புள்ளிகள் உயர்ந்து 25,819.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

stock market

கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை

Updated On :

மும்பை: நேற்றைய விடுமுறைக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தையில் காளைகளின் ஆதிக்கம் மீண்டும் வலுப்பெற்றது.

ஆசிய சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கிற்கு மாறாக, வலுவான வெளிநாட்டு நிதி வரவும், குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் முன்னனி பங்குகளில் ஏற்பட்ட கொள்முதல் உள்ளிட்டவையால், சென்செக்ஸ் 1,502.29 புள்ளிகள் உயர்ந்த நிலையில், நிஃப்டி 25,819.25 புள்ளிகளாக உயர்ந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 2,062.22 புள்ளிகள் உயர்ந்து 84,498.21 புள்ளிகளை எட்டிய நிலையில், நேற்றைய முன்தினம் (திங்கள்கிழமை) ஏற்பட்ட சரிவிலிருந்து பங்குச் சந்தை கணிசமாக மீண்டு, வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,502.29 புள்ளிகள் உயர்ந்து 83,938.28 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 469.60 புள்ளிகள் உயர்ந்து 25,819.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் 5.94 சதவீதமும், டிரெண்ட்ஸ் 3.59 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.44 சதவீதமும், இன்டர்குளோப் ஏவியேஷன் 3.24 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 3.18 சதவீதமும் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் 3.04 சதவீதம் உயர்ந்தன. மறுபுறம் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 6.16 சதவீதம், ஜப்பானின் நிக்கெய் 225 2.78 சதவீதம், ஷாங்காயின் SSE கூட்டு குறியீடு 2.03 சதவீதம் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.14 சதவீதம் சரிந்தன.

அமெரிக்காவின் தனிநபர் நுகர்வுச் செலவின பணவீக்கத் தரவுகள் வெளியாக உள்ள நிலையில், ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் வட்டி விகிதம் தொடர்பான கடுமையான கருத்துகள், டிசம்பர் மாதத்தில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வர்த்தகங்களிலிருந்து வெளியேறியதால் இந்தியா தொடர்ந்து பயனடைந்தது காளையின் ஆதிக்கம் வலுத்து வருகிறது.

ஐரோப்பிய பங்குச் சந்தை உயர்ந்து வர்த்தகமானது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் குறியீடு 1.48 சதவிகிதமும், எஸ்&பி-500 0.50 சதவிகிதமும் சரிந்தன. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 0.85 சதவிகிதம் உயர்ந்தது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றை முன்தினம் (திங்கள்கிழமை) ரூ. 5,672.99 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.19 சதவீதம் குறைந்து 91.38 அமெரிக்க டாலராக உள்ளது.

ஸ்ரீ குரு நானக் தேவ் தினத்தை முன்னிட்டு, நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Summary

Indices ended sharply higher on Wednesday, with the Sensex rallying 1,502.29 points and the Nifty rising to 25,819.25.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.