சர்வதேச டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மா புதிய சாதனை!
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

அபிஷேக் சர்மா
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இந்தூரில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 30 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
2â£0â£0â£0⣠T20I runs â
— BCCI (@BCCI) October 11, 2026
A major milestone for Abhishek Sharma ðð
Updates â¶ï¸ https://t.co/0ve4uDWSIn#TeamIndia | #INDvWI | @mflone_ | @OfficialAbhi04 pic.twitter.com/mdBTBjCmHH
நேற்றையப் போட்டியில் 69 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 2036 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 14 அரைசதங்கள் மற்றும் 3 சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 135.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் (அக்டோபர் 14) ஹைதராபாதில் நடைபெறுகிறது.
Summary
Indian opener Abhishek Sharma has set a new record in international T20 matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


