கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது; புவனேஷ்வர் குமாருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர் குமார் (கோப்புப் படம்)
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில், டி20 தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கடைசியாக விளையாடியிருந்த புவனேஷ்வர் குமார், 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா - Suresh Raina
இந்த நிலையில், புவனேஷ்வர் குமாரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பிடித்துள்ள புவனேஷ்வர் குமாருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அண்மைக் காலமாக மிகவும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். நான் அவரை சந்தித்துப் பேசினேன். அவர் மிகவும் சுறுசுறுப்பான கிரிக்கெட் வீரர். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது.
36 வயதில் அவர் மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் எப்போதும் சரியான முறையில் தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொள்பவர். உடல் தகுதியில் அவர் கடினமாக உழைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் நன்றாக செயல்படுவார் என நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Summary
Former player Suresh Raina has stated that Indian fast bowler Bhuvneshwar Kumar's hard work has paid off.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


